அன்புக்குரிய வாடிக்கையாளர்களே, வழங்குநர்களே,

Clicktomart.com எனும் வியாபார வலைத்தளத்தின் மூலம் உங்களோடு நாங்கள் இணைந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம். பல online வலைத்தளங்கள் தற்போது பரவலாக காணப்படும் சூழலில் clicktomart.com என்பது சிலருக்கு அறிமுகமானதாகவும் பலருக்கு புதியதாகவும் தோன்ற முடியும். அந்த வகையில் எங்கள் வலைத்தளத்தைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம் இதோ!

clicktomart.com  இன் பிரதான நோக்கம் பிரபல விற்பனையாளர்கள், விற்பனையை மேம்படுத்துவதில் ஆர்வமுடையவர்கள், முழு நேர விற்பனையாளர்கள் ஆகிய அனைவரையும் ஒன்றாக இணைத்து எங்கள் மாவட்ட வாழ் மக்கள் இலகுவாக பல ஒப்பீட்டு பொருள்களிடையே தங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்கான ஒரு சரியான தளத்தை அமைத்துக் கொடுப்பதாகும்.

இதன் மூலம் வாடிக்கையாளர்களின் கொள்வனவு ஆற்றல் சரியான வழங்குநர்களிடையே பிரயோகிக்கப்பட முடியும் என நம்புகின்றோம். இது online மூலமான கொள்வனவை ஊக்கப்படுத்துவதோடு வாடிக்கையாளர், வழங்குநர் என்ற வகையில் இரு தரப்பினருக்கும் நன்மையாக அமையும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

கடைகளில் கொள்வனவு செய்வதை விட clicktomart.com இல் கொள்வனவு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் பெறக் கூடிய அனுகூலங்கள் என்ன?

 • பல கடைகளுக்கு சென்று பொருட்களின் விலை, தரத்தை ஒப்பீடு செய்வதில் நேரத்தை செலவழிக்கத் தேவையில்லை.
 • பொருட்கள் பெற்றுக் கொண்ட பின்னரே பணம் செலுத்த முடியும்.
 • இலவச விநியோகம் (மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி – Cash on Delivery – Free delivery charge).
 • வழங்குநர்களே நேரடியாக பொருட்களை clicktomart.com இல் காட்சிப்படுத்துவதால் உற்பத்தி விலையில் அல்லது அதையும் விடக் குறைந்த கழிவு விலையில் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.
 • எந்த நேரத்திலும் வலைத்தளத்தில் பிரவேசித்து பொருட்களை கொள்வனவு செய்து கொள்ள முடியும் (24மணித்தியாலம் x 7நாட்கள்).

எங்கள் வலைத்தளத்தில் நீங்கள் எவ்வாறான பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்?

 • நீங்கள் உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்காகவோ நிறுவன தேவைகளுக்காகவோ கொள்வனவு செய்யக் கூடிய பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்(Computers & Offices, Electronics, Home, Garden, Pets & Tools, Movies, Music & Games,  Beauty & Health, Food, Beverage & Grocery, Automobile & Parts,Clothing, Shoes &Jewels & etc.)
 • clicktomart.com இன் user friendly அப்ளிகேஷனை உங்கள் கையடக்க தொலைபேசியில் தரவிறக்கம் (Download) செய்து அல்லது www.clicktomart.com வலைத்தளத்தில் பிரவேசித்து பொருட்களை இலகுவாக பார்வையிட முடியும்.

www.clicktomart.com இல் கொள்வனவு செய்வதால் சேவைக் கட்டணங்கள் (Ex : Delivery Charges) செலுத்த வேண்டுமா?

இல்லை. www.clicktomart.com வலைத்தளம் குறிப்பாக மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடியில் வாழும் இரண்டு பிரதேச மக்களையே வாடிக்கையாளர்களாக கருத்திற் கொள்கின்றது. வழங்குநர்களும் இரண்டு பிரதேசங்களுக்குட்பட்டவர்களாக காணப்படுவதால் வாடிக்கையாளர்கள் Free Delivery மூலமே கொள்வனவு செய்யும் அனைத்து பொருட்களையும் வீட்டிலிருந்தவாறே பெற்றுக் கொள்ள முடியும்.

www.clicktomart.com இல் ஒரு வழங்குநராக பதிவு செய்வதால் பெறக் கூடிய அனுகூலங்கள் என்ன?

 • உங்கள் கடைக்குரிய வாடகை, வியாபாரத்தை பதிவு செய்வதற்கான கட்டணங்கள் இல்லை.
 • உங்கள் வணிகத்திற்கு வழங்கப்படும் தனிப்பட்ட ருசுடு மூலம் உங்கள் வியாபாரத்தை வாடிக்கையாளர்களிடையே விளம்பரம் செய்து கொள்ள முடியும்.
 • உதாரணத்திற்கு clicktomart.com/shops/yourshopname என்றவாறு அமையும். இத்தகைய www.clicktomart.com போன்ற ஒரு வியாபார வலைத்தளத்தில் உங்கள் பணம்,நேரம்,முயற்சி எதுவுமின்றி இலவசமாக ஒரு வழங்குனராக பதிவு செய்து கொள்ளும் ஒரு வாய்ப்பை பெறுகின்றீர்கள்.
 • உங்களின் எல்லைக்குட்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மேலதிகமாக www.clicktomart.com இல் நீங்கள் பதிவு செய்வதால் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுக் கொள்ள முடியும். காரணம் இரண்டு சன அடர்த்தி கூடிய பெரும் பிரதேசங்களிலிருந்தான வாடிக்கையாளர்களை www.clicktomart.com வலைத்தளம் கருத்திற் கொள்கின்றது.
 • வாடிக்கையாளர்கள் வழங்குநர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வதால் காட்சிப்படுத்தும் பொருட்கள் தொடர்பிலான குறை,நிறைகளையும் அபிப்பிராயங்களையும் அறிந்து கொள்ள முடிதல்.

www.clicktomart.com இல் வழங்குநராக பதிவு செய்வதற்காக மாதாந்த/வருடாந்த சேவைக் கட்டணம் செலுத்த வேண்டுமா?

இல்லை.நீங்கள் இலவசமாகவே உங்கள் வணிகத்தை www.clicktomart.com இல் பதிவு செய்து கொள்ள முடியும். இதற்கா எதுவித தனிப்பட்ட கட்டணங்களையும் www.clicktomart.com அறவிடமாட்டாது.

www.clicktomart.com உடனான கொள்வனவு மற்றும் விற்பனையின் போது ஏதேனும் பிரச்சனைகள் அல்லது சந்தேகங்கள் ஏற்பட்டால் தீர்வு காண்பது எவ்வாறு?

 • இதன் ஊடான வாடிக்கையாளர்கள் மற்றும் வழங்குநர்களுக்கான தனிப்பட்ட கேள்வி பதில்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
 • எங்கள் உதவியாளர்களுடன் நேரடியான வலைத்தள உரையாடல் மூலமாக (Live Chat) உங்கள் பிரச்சனைகள் அல்லது சந்தேகங்களுக்கு தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் (click here!).
 • எங்கள் தொலைபசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலமாகவும் (click here!)
 • மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடியில் அமைந்துள்ள எங்கள் பிராந்திய காரியாலயங்களுக்கு நேரடியாக வருகை தருவதன் மூலமாகவும் எங்களை தொடர்பு கொண்டு உங்கள் பிரச்சனைகள் சந்தேகங்களுக்கு தெளிவைப் பெற முடியும்.

இன்றைய கால கட்டத்தில் online வணிகம் பொதுவாக மக்களிடையே பரவலானதும் பரிச்சயமானதுமான ஒரு விடயமாக மாறிவிட்டது என்பது உண்மை. ஆனாலும் online வணிகம் எனும் போதே வாடிக்கையாளர்களுக்கும் வழங்குநர்களுக்கும் பொதுவாக தயக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விடயங்கள் இரண்டு. ஒன்று பணப்பரிமாற்றம் (Money transfer). அடுத்து பொருட்கள் பரிமாற்றம் (Delivery). ஆனால் இங்கு பொருட்கள் பரிமாற்றம் (Delivery) செய்து கொள்ளப்படும் போதே பணப்பரிமாற்றம் நடை பெறுவதால் வாடிக்கையாளர்களுக்கும் வழங்குநர்களுக்குமிடையில் எதுவித பிரச்சனைகளும் தோன்றாது. இதற்காக இரண்டு வேறுபட்ட பிரதேசங்களுக்கான தபால் குறியீடுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

மட்டக்களப்புBatticaloa (30000)

காத்தான்குடி – Kattankudy (30100)

இதனால் வாடிக்கையாளர் தன் பிரதேச வழங்குநரையும், வழங்குநர் தன் பிரதேச வாடிக்கையாளர்களையும் பொருள் மற்றும் பணப் பரிமாற்றத்தில் எதுவித சந்தேகங்களுமின்றி உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

நாங்கள் online வணிகத்திற்கு புதியவர்களாக அமைந்தாலும் clicktomart.com மூலம் வாடிக்கையாளர்களுக்கும் வழங்குநர்களுக்கும் சிறந்த ஓர் வலைத்தளப் பங்காளியாக உள்ளோம் என்பதை எங்களோடு இணைவதன் மூலம் நீங்கள் உணர முடியும்.

இப்படிக்கு,

Gobikrishna D
(Web developer & Director of clicktomart.com)